அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் நின்றிருந்த 18 வயதுடைய இளைஞரை நேற்று (14) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த இருவர் கடத்திச் சென்றதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞரிடம் காணப்பட்ட ன தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த குறித்த நபர்கள் இளைஞரை இடைவழியில் கைவிட்டுச் சென்றதாக அவிசாவளை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் இது தொடர்பில் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

