யாழ். நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு!

235 0

யாழ். நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு மாணவர்கள் வருவதை இடைநிறுத்துகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது.

நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் போலிஸார் அப்பகுதியில் காணப்படுவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.