சிறிலங்கா ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

216 0

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் ஆரம்பமாகி  சேர்.பொன்.இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியூடாக பேரணியாக நகர்ந்து வருகிறது.

இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள்,அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.