அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் இலங்கை விஜயம்

215 0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியும் இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளருமான எலைன் லாபச்சர் (Eileen Laubacher)இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எலைன் லாபச்சரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றார்.

இவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரைடியாடியுள்ளதுடன் ஏனைய அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

 

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் எலைன் லாபச்சர், வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக்களின் போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கும் உடனிருந்தார்.

மேலும், எலைன் லாபச்சர் இலங்கை விஜயத்தின் பின்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.