திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பண மோசடிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (ஜன 11) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

