ஏற்றுமதி அடிப்படையிலான பெற்றோலிய சுத்திகரிப்பு மற்றும் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு நிலையத்தை அம்பாந்தோட்டையில் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட பெற்றோலிய சுத்திகரிப்பு மற்றும் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு அதிக ஆற்றல்வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஏற்றுமதி வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதற்கமைய, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்றுப் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விருப்பக் கோரல் அறிவித்தலை வெளியிடுவதற்கும், மற்றும் அவற்றில் அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற முதலீட்டாளர்களின் விபரத்துடன் கூடிய உத்தேசத்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

