மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விருப்பக் கோரல்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான திட்டத்திற்கமைய, விமானப் போக்குவரத்துக்களைப் போலவே விமானப் போக்குவரத்து அல்லாத ஏனைய பணிகளுக்காகவும் வர்த்தக வாய்ப்புக்களை செயற்படுத்தி பல்நோக்கு வர்த்தக மத்திய நிலையமாகக் குறித்த விமான நிலையத்தை பரிமாற்றுவதற்காக ஆற்றல் வளம் காணப்படுகின்றது.
அதனால், அரச – தனியார் பங்குடமை முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குறித்த வசதிகள் மற்றும் சொத்துக்களைப் பயனுறும் வகையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, வானூர்தி போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்து அல்லாத வர்த்தகங்களை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்வதற்காக நேரடி மற்றும் மறைமுக விமான சேவைகள் தொடர்பான தொழில் முயற்சியாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்களை பெறுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

