சட்டவிரோத மருந்தக செயற்பாடு – நீதவான் கடும் எச்சரிக்கை

212 0

அனுமதிப் பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தி வந்தமை மற்றும் காலவதியான பரிசோதனைக்கான பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

இதற்கு அமைய குற்றவாளியாக இனம் காணப்பட்ட மூவருக்கு முறையே ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா, இரண்டு லட்சம் ரூபா மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவர்களுக்கு ஐந்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தண்டனையின் பொருட்டு குற்றவாளிகளுக்கு அதிகூடிய சிறை தண்டனையாக 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் நீதவான் அந்தோனிசாமி பீட்டர்போல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தண்டனை பெற்றுள்ளவர்கள் பத்திரிக்கைகளின் ஊடாக இது தொடர்பில் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.