பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 பேர் பண்டாரகமவில் கைது!

144 0

பண்டாரகம, பொல்கொட பிரதேசத்தில்  நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  12 பேர் கைது செய்யப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

15,000 ரூபா பணமும்  இவர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பண்டாரகம பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் துஷார டி சில்வாவுக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச்  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.