பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நாய் அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் மூவர் உட்பட ஐவரைக் கடித்ததுடன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்தே பிரான்ஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிக் மார்ஷல் பெர்னார்ட் கோல்மேன், 84 வயதான பிரான்ஸ் பிரஜையே கைது செய்யப்பட்டவராவார்.
6 வயதுடைய குறித்த நாய் கடந்த 23ஆம் திகதி வீட்டிலிருந்து தப்பிச் சென்றே இவ்வாறு மனிதர்களைக் கடித்துள்ளது.

