சமூக ஊடக பதிவுகளிற்காக உய்குர் ஊட்டச்சத்து நிபுணர் சீன அதிகாரிகளால் கைது

162 0

சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்திகளிற்காக  நன்கு அறியப்பட்ட உய்குர்ஊட்டச்சத்து நிபுணர் பெஹ்தியார் சாதிர் சீன அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுவீடனில் உள்ள அவரது சகோதரர்களும் பொலிஸாரும் இதனை தெரிவித்தனர் என ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்துள்ளது.

சாதிர்  தேசிய அளவிலான சுகாதார பயிற்றுவிப்பாளர் என்பதுடன் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்திற்கான ஜின்ஜியாங் சங்கத்தின் உறுப்பினர்.

கொவிட்டை கட்டுப்படுவதற்காக உரும்கி நகர் மீது சீனா அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து  இவர் காணாமல்போனார் என அவரின் இளைய சகோதரர் தெரிவித்துள்ளார்.

சாதீர் தனது வீ சட்டில் பதிவிடுவதையும் தனது நிறுவன இணையத்தளத்தில் தகவல்களை வெளியிடுவதையும் நிறுத்தியதை தொடர்ந்தே தங்களிற்கு சந்தேகம் வந்தது என அவரின் சகோதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது குறித்து ரேடியோ பீரி ஏசியாவிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் அரச இரகசியங்களை  வெளியிட்டமைக்காக சதீர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை வழங்க முடியாத அதிகாரி  நகரின் மற்றுமொரு பொலிஸ் நிலையத்தில் தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொண்டார். அந்த பொலிஸ் நிலையமே இவரை கைதுசெய்தது என தெரிவித்தார்.

சாதீர் கைதுசெய்யப்பட்டதை உறுதி செய்த பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஒருவர் இந்த கைதுஇடம்பெறும்வேளை தான் அங்கு காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

சாதீரும் ஏனைய உய்குர்களும் இரவு சோதனையின் போது கைதுசெய்யப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.

அவர் ஒரு இடத்தின் படங்களை எடுத்து வீ சட் மூலம் அனுப்பியுள்ளார் போல தோன்றுகின்றது இதன் காரணமாகவே அவர் கைதுசெய்யப்பட்டார் விசாரணை செய்யப்படுகின்றார்என தெரிவித்துள்ள அந்த பொலிஸ் அதிகாரி கொரோனா காலத்தின் கடும் கட்டுப்பாடுகள் குறித்த படங்களையே சாதீர் அனுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.