பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் மற்றும் ஏனைய தரப்பினருடன் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதன் காரணமாக சமூகத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக அமைதியின்மையின் போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகள் விநியோகம் போன்றவற்றை உறுதி செய்வதற்காக ஆயுத படையினரும் பொலிஸாரும் வழங்கிய ஒத்துழைப்பிற்காக கமால் குணரட்ண அவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நாடு அரசியல் ரீதியில் ஸ்திரமற்றதாக குழப்பம் மிக்கதாக மாறுவதை தடுப்பதற்கு அவசியமான ஆதரவை அவர்கள் வழங்கினார்கள் எனவும் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

