பயணிக்கத் தவறும் அமைச்சுக்களின் செயலாளர்களைவெளியேற்ற நடவடிக்கை

157 0

அரச நிர்வாக சேவையின் செயலாற்றுகையை முன்னெடுத்துசெல்லும் நோக்கில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கிடையில் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஒன்றை இந்த வருடம் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஜனாதிபதி செயலாளரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

செயலாளர் பதவி வகிக்கும் அமைச்சுக்களின் செயலாற்றுகையை அதிகரிப்பதற்காக இந்தவருடத்துக்கான ஒரு இலக்கு ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்படுவதுடன் அந்த இலக்கின் ஊடாக பயணிக்கின்றதா என 3மாதங்களுக்கு ஒரு முறை அதன் முன்னேற்றத்தை ஆராய்ந்துப் பார்க்க இருக்கின்றது.

அவ்வாறு ஆராய்ந்து பார்க்கும்போது, குறித்த இலக்கை போதுமான அளவில் பூரணப்படுத்தாத அமைச்சுக்களின் செயலாளர்கள் 6மாதங்களில் கடமையில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தீர்மானித்துள்ளார்.

60வயது பூரணமான அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகளவில் ஓய்வு பெற்றுச்செல்கின்றதால் புதிதாக நியமிக்கப்படும் அமைச்சுக்களின் செயலாளர்களும் இந்த ஒப்பந்தத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

மேலும் அரச சேவையின் செலவை 25வீதத்தால் குறைத்தல், தேவையற்ற செலவுகளை இல்லாமலாக்குவது. அதேபோன்று சுற்று நிருபத்தின் பிரகாரம் செயற்படுதல் போன்ற அரச சேவையின் முன்னேற்றத்துக்குரிய பல இணக்கப்பாடுகளை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.