பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவியின் கைகளைக் கட்டிவைத்து கொள்ளையிட்ட மூவர் கைது

197 0

வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட்ட  குழுச் சேர்ந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், வெலிபன்ன, பொண்டுபிட்டிய பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரியின்  வீட்டுக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள், அவரது மனைவியின் கைகளைக் கட்டி, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளை  கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அலுபோமுல்ல, குடா அருக்கொட மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.