யாழில் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

188 0

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நேற்றிரவு (டிச.31) இடம்பெற்றது.

இதன்போது பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் பேருந்தின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால், அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவியது.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.