மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி ஒருவர் பலி

157 0

அகலவத்தை – புலத்சிங்கள வீதியில் பிம்புர வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலேகொடவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மஹகம, மஹின்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மூவர் நாகொட மற்றும் பிம்புர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் சகோதரர் மற்றும் லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆவார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.