மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை…..(காணொளி)

231 0

 

மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை தெரிவித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

காணிச் சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த மக்களின் பிரச்சினை குறித்து பொறுப்பான பதிலை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் ஏறத்தாழ 70 ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், இவற்றில் 3 தசம் 6 வீதமான காணிகளே விடுவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 19,790 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சியில் 12,840 ஏக்கர் காணிகளும், வவுனியாவில் 23,778 ஏக்கர் காணிகளும், யாழ்ப்பாணத்தில் 6,270 ஏக்கரும், மன்னாரில் 7,314 ஏக்கர் காணிகளும் என 69, 992 ஏக்கர் காணிகளை படையினர் சுவீகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2,500 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.