யாழில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

255 0
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வறுமையில் வாழும் தேவைகள் உடையவர்களுக்கு அவர்களது தேவைகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோருக்கான 04 துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு 21/02/2017 செவ்வாய் மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
அந்த வகையில் குறித்த துவிச்சக்கரவண்டிகளை பெற்றுக்கொண்டவர்களாக கைதடியை சேர்ந்த பாடசாலை மாணவி அவர் தனது நாளாந்த பாடசாலைக்கான பயணத்திற்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும், அதேபோல யாழ்ப்பாணம் மடம் வீதியை சேர்ந்த தந்தையை இழந்த பாடசாலை செல்லும் மாணவியும் நாள்தோறும் சுமார் 03 கிலோ மீட்டர் நடந்து பாடசாலை செல்வதாகவும் அமைச்சருடன் தொடர்புகொண்டு தமது குடும்ப வறுமை தொடர்பாக தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இரண்டு மாணவிகளுக்கும் 02 துவிச்சக்கரவண்டிகளும், அதேபோல கரவெட்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அவருடைய சுயதொழிலுக்காக ஒரு துவிச்சக்கரவண்டியும், ஆவரங்காலில் உள்ள மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுயதொழில் செய்துவரும் பெண்ணொருவருக்கு அவருடையதும், அவருடைய பாடசாலை செல்லும் தங்கைக்கும் பயனுள்ளதாக ஒரு துவிச்சக்கரவண்டியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளை கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அவரது அலுவலக பொதுசன தொடர்பு செயலாளர் கு.கென்றிமகேந்திரன் அவர்களும் இணைந்து வழங்கிவைத்தனர்.