21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மிக விரைவில் எடுக்கப்படவுள்ளது.
இதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக அறிய முடிகின்றது.
அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதித்துவம் தொடர்பில் 112 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நவம்பர் 28ம் திகதியுடன் முடிவடைந்தது.
எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், சிறந்த மற்றும் நேர்மையானவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயரைப் பெற்றவர்கள் குறித்த பேரவை உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பொருத்தமான மூவரை தெரிவு செய்வது தொடர்பில் விண்ணப்பங்கள் வியாழனன்று பரிசீலிகப்படவுள்ளதாக அறிய முடிகின்ரது.
அதன் பின்னர் அவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

