கிளிநொச்சி பளை பஸ் விபத்து! சாரதிக்கு விளக்கமறியல்!

174 0

கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளான பஸ் சாரதியை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று செவ்வாய்க்கிழமை (டிச 21) மாலை    கிளிநொச்சி பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதுடன் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணொருவர் உயிரழந்ததுடன் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பளைப் பொலிஸார்  விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை  கைது செய்து  நேற்று வியாழக்கிழமை (டிச 22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில்,  குறித்த பஸ் சாரதியை எதிர் வரும் ஜனவரி மாதம் 4 ஆம்   திகதிவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் கட்டளையிட்டுள்ளது.