மஹியங்கனை பாதுகாப்பு வனப்பகுதியில் புதையல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வாள் ஒன்றை 40 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சமனலவெவ பம்பஹின்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மஹியங்கனை வனப்பகுதியில் புதையல் ஒன்றிலிருந்து இந்த வாள் எடுக்கப்பட்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்..
மன்னர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் தொல்பொருள் பெறுமதியான இந்த வாள் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது என பாணந்துறை வலா ன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வாளை 40 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய சந்தேக நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 21 ஆம் திகதி குறிப்பிட்ட சந்தேக நபர்களை பம்பைன்ன பகுதிக்கு வரவழைத்து கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

