சிறுநீரகங்களை கொண்டு செல்ல லம்போர்கினியை பயன்படுத்திய இத்தாலிய பொலிஸார்

87 0

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு 2 சிறுநீரகங்களை நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தூரம் விரைவாக கொண்டுசெல்வதற்காக லம்போர்கினி காரை தாம் பயன்படுத்தியதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை, இத்தாலியின் வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள பதுவா நகரிலிருந்து ரோம் நகருக்கு இச்சிறுநீரகங்கள் கொண்டு செல்லப்பட்டு, நோயாளிகள் இருவருக்கு பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணித்தியாலத்துக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் பயணி;க்கக்கூடிய லம்போர்கினி ஹுரக்கன் (Lamborghini Huracan) கார், மேற்படி கார் தயாரிப்பு நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டில் இத்தாலிய பொலிஸாருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.

இத்தாலியின் வட பகுதியிலுள்ள பொலோக்னா நகரின் நெடுஞ்சாலைகளில் இக்கார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், குருதி மற்றும் உடற்பாகங்கi அவசரமாக கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.