பொதுச் சந்தைக்குள் தேங்காய் வியாபாரிகள் கூறு விலை கோரல் மேற்கொள்ளும் இடத்தில் மழை காரணமாக நெருக்கடியை சந்தித்துவருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

பொருத்தமற்ற இடம் காரணமாக மழை காலங்களில் சேறும் சுரியுமாக காணப்படுகிறது என்றும், அத்தோடு அருகில் உள்ள மலசல கூடங்களிலிருந்து வெளியேறும் நீர் சேர்ந்து காணப்படுவதாகவும் தேங்காய் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுப்படுவதில் நெருக்கடியாக இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் கீழ் குறித்த சந்தை கிளிநொச்சி மாவட்டத்திற்கான பொதுச் சந்தையாகவும் காணப்படுவதோடு நாளாந்தம் பெருமளவான கொள்வனவாளர்களும், விற்பனையாளர்களும் ஒன்று கூடுகின்ற சந்தையாகவும் விளங்குகிறது.

எனவே கரைச்சி பிரதேச சபையினர் இதனை கருத்தில் எடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

