வாகனங்களின் செசி இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை மாற்றி அவற்றுக்குப் பதிலாக போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கைப்பற்றபட்ட வாகனங்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய, மினுவாங்கொட மற்றும் மகாவிட பிரதேசங்களில் வசிக்கும் 54 மற்றும் 58 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து கார், லொறி மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

