நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இரண்டு சட்டத்தரணிகளினால் இந்த முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சனத் நிஷாந்தவிற்கு எதிராக குற்றஞ்சாட்டுகளை முன்வைக்கதற்கு ஜனவரி 17 ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

