விவசாய செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை விவசாயிகளை பாதிக்கும் என வவுனியா கமநல உதவி ஆணையாளர் நேசரத்தினம் விஸ்ணுதாசன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வவுனியா மாவட்டத்தில் இம்முறை நெற்செய்கைக்காக 23,399 ஹெக்ரேயர் இலக்காக இருந்தது. இவற்றில் 85 முதல் 90 வீதம் பயிரிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரை போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை.
இதனால் மானாவாரியாக விதைக்கப்பட்ட இடங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அத்துடன் குளங்களுக்கும் போதிய நீர் கிடைக்கவில்லை.
தற்போது பெய்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்நிலையில் பசளை போதியளவு கிடைக்கப்பெற்றமையால் ஒரு அந்தர் 10000 ரூபா வீதம் உலக வங்கியின் அனுசரணையோடு விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் குடலைப் பசளை 50 கிலோ மூடை 19,500 ரூபாவுக்கு கமநல சேவை நிலையங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலவச பசளை யு.எஸ் எயிட் மூலமாக ஒரு ஹெக்ரேயருக்கு குறைந்த 5326 விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் நீர் பற்றாக்குறையால் பல இடங்களில் இதுவரை நெல் விதைக்கப்படாமல் உள்ளது. அத்துடன் சில இடங்களில் நீர் அதிகரித்ததால் மானாவாரி காணிகளும் கைவிடப்பட்டுள்ளன.
இத்துடன் விவசாயத்திற்கான செலவு அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில் நெல்லின் விலை குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் தமது செலவை ஈடுசெய்ய முடியாமல் உள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சத்து 80ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை செலவாகின்றது. அந்த அளவுக்கு நெல்லின் விலை காணப்படவில்லை. நெல் சந்தைப்படுத்தும் சபையால் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படவில்லை-என்றார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

