ஓய்வின்றி பணியாற்றிய வானிலை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

178 0

‘மேன்டூஸ்’ புயலின் நகர்வை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

புயல் பற்றிய தகவல்களை தொலைக் காட்சிகள், வானிலை ஆய்வு மைய ட்விட்டர் பக்கங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் உடனுக்குடன் தெரிவித்து வந்தனர். வெள்ளி இரவு புயல் கரையை கடக்கத் தொடங்கியது முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் முழுமையாக கரையை கடந்தது வரை ஓய்வின்றி பணியாற்றி உடனுக்குடன் தெரிவித்து வந்தனர். சரியான இடத்தையும், நேரத்தையும் முன்கூட்டியே கணித்து, விடிய, விடிய தகவல்களை தெரிவித்து வந்ததற்காக அக்குழுவுக்கு சமூக வலைதளங்களில் பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.