நத்தார் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சியில் உள்ள பல்வேறு பேக்கரி நிறுவனங்கள், டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடப்படும் நத்தார் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரித்து மக்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.
அந்த வகையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ராஜேஸ்வரி பேக்கரியில் தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் வலது கையை உயர்த்தியவாறு நிற்கும், சுமார் 6 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான கேக்கை தயாரித்து இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் கூறுகையில்,
‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். அவரை பாராட்டும் விதமாக இந்த கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்கள் நான்கு பேர் குழுவாக சேர்ந்து மைதா, சர்க்கரை, முட்டை, பேக்கிங் பவுடர் கலந்த கலவையால் 24 மணி நேரத்தில் இந்த கேக்கை தயாரித்தனர்.
62 கிலோ எடை கொண்ட இந்த கேக் இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்கள், தமிழக முதல்வர் உருவத்தில் உள்ள இந்த கேக்கை ஆச்சரியமாக பார்ப்பதுடன், அதன் அருகில் நின்று செல்ஃபி எடுத்து சிலாகித்துச் செல்கின்றனர்’ என்றார்.

