நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவிய கடும் குளிருடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் சுமார் 500 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

