யாழில் நிலமீட்பு போராட்டம்

342 0

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தென் இலங்கை அமைப்புகள்  ஒன்றினைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் நிலமீட்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வலிவடக்கு  கிளிநொச்சி புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாபிலவு பகுதிகளில் இராணுவத்தினரின் வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.

மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதில் கூறு மைத்திரி அரசே நல்லாட்சி அரசே உடனடி தீர்வை வழங்கு போன்ற கோசங்களை தாங்கி இந்த போராட்டம் இடம்பெற்றது.