விபத்துக்களில் சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் பலி!

179 0

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குளியாபிட்டிய – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிதலவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதசாரி ஒருவர் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரம் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வெல்லவாய – தனமல்வில வீதியில் தெளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.