கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ரி – 56 ரக துப்பாக்கிக்கான 15 தோட்டாக்களுடன் கரந்தெனிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை விசாரணைக்காக கைது செய்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தோட்டாக்களுடன் கைது செய்ய சென்றபோது பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் அவரது தந்தையும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்குச் சொந்தமான கறுவாத்தோட்ட நிலத்திலிருந்தே இந்த தோட்டாக்கள் கொண்டுவரப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

