பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

146 0
நுகேகொட தெல்கந்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (09) நுகேகொட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் மனநலம் தொடர்பான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.