பூசா சிறைச்சாலையில் நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

173 0

கடுமையான குற்றங்கள் புரிந்தவர்கள்  வைக்கப்பட்டுள்ள  பூசா சிறைச்சாலையில் ஐந்து கைத்தொலைபேசிகள், ஐந்து சார்ஜர்கள் மற்றும் ஐந்து சிம் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறைச்சாலையின் விசேட பிரிவின் நுழைவாயிலுக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதையுண்டு காணப்பட்ட நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பூசா சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.