கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை தோட்டம் கல்லந்தென்ன பிரிவில் புதன்கிழமை (டிச.07) விறகு வெட்ட சென்ற இளைஞன் மீது மரம் வீழ்ந்ததில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதன்போது கல்லந்தென்ன பிரிவைச் சேர்ந்த ரொசான் குமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயது நபரே மரம் முறிந்து வீழ்ந்து உயிரிழந்தவராவார்.
மேற்குறிப்பிட்ட இரு இளைஞர்களும் இன்று (07) காலை 9.30 மணியளவில் காட்டுக்கு விறகு வெட்ட சென்றுள்ளனர்.
இதன் போது மரம் ஒன்றினை விறகுக்காக வெட்டிய சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக வெட்டிய மரம் இளைஞர் மீது வீழ்ந்ததில் உடல் நசுங்கி குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளளார். உடனிருந்த சக நண்பன் அதிர்சிக்குள்ளான நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

