யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுனால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் தடைப்பட்டிருந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி அனுமதி மீண்டும் கிடைத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் 250 வீடுகள் அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்க தயாரான நிலையில் தடைப்பட்டிருந்தது. இவ்வாறு அமைக்கப்படுவதாக வாக்குறுதியளித்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுப் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது. இருப்பினும் இத் திட்டத்ரிற்கான நிதி அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தமையினால் இப் பிரதேச மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தி நிலவியது.
இது தொடர்பில் நாவற்குழுப் பிரதேசத்தில் வாழும் குடும்பங்களும் தமது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிட்டனர்.
அவர்களது நியாயபூர்வமான கோரிக்கை தொடர்லில் உடனடியாகவே கவனம் செலுத்தினோம். அதன் பிரகாரம் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்டப் பிரதிநிதியூடாக குறித்த நிதியினைப் பெறுவதற்காக முயற்சிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நாவற்குழியில் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்ட 250 வீடுகளிற்குமான நிதி அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதனால் விரைவில் அதற்கான நிதியும் கரம் கிட்டும் என எமிர்பார்க்கப்படுகின்றது. எனவே அடுத்த கட்டமாக இப் பகுதிக்கான வீடு அமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும். என்றார்.

