வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சட்டத்தரணி ஒருவரும் இரண்டு பெண்களும் நேற்றிரவு (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும் கோட்டே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 9 மி.மீ துப்பாக்கி மற்றும் சொகுசு ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கைத்துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு சட்டத்தரணியின் நண்பர் ஒருவர் கடன் வழங்கியதாகவும் அதனைச் செலுத்தாத காரணத்தினால் கடனை வழங்கிய பெண்ணுடனும் மற்றுமொரு பெண்ணும் சட்டத்தரணியுடன் கடன் பெற்றவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு இவ்வாறு வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

