தொல்லியல் சட்டத்தில் பொருத்தமான ஒழுங்குவிதிகளை விதிப்பதற்கு நடவடிக்கை

226 0

தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்திற்கோ அல்லது சொத்துக்கோ சட்ட விரோதமாக பாதிப்புக்களை ஏற்படுத்தி தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தை மீறுகின்ற நபரொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொல்லியல் திணைக்களத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் இயலுமை உண்டு.

அதற்கமைய, குறித்த அரச நிறுவனத்தால் இலங்கையில் தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்துப் பேணுவதற்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

அதற்காக குறித்த நிறுவனங்களிலுள்ள பணியாளர் குழாமை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொருத்தமான ஒழுங்குவிதிகளை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.