ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு காசி தமிழ் சங்கமம்: ஜி.கே.வாசன் பெருமிதம்

85 0

வாரணாசியில் நடைபெற்று வரும்காசி தமிழ்ச் சங்கமம் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் கடந்த 17-ம் தேதி முதல் காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார். ஒரு மாதம் நடைபெறும் விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது கலாச்சாரம். அந்த கலாச்சாரத்தை பேணிக் காப்பதுதான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் மோடி, காசி தமிழ்ச் சங்கமத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

மக்களின் சங்கமம்: ராமேசுவரம் – காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடுமட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக் தொடரும்இந்த உறவை மெருகேற்றி,ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 4 திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்துக்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாராட்டுக்குரியது. இந்த விழாவுக்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.