இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது.வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நொப்பொர்ன் அட்சரியாவான்சி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று சந்தித்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

