22 மணித்தியால வேலைக்கு 800 ரூபா போதாது எனக் கூறியவர் மீது இரும்புக் கம்பித் தாக்குதல்!

93 0

இரவும் பகலுமாக 22 மணிநேரம் வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட  800 ரூபா பணம் போதாது என கூறிய நபரை பணிக்கு அமர்த்திய நபர் சுயநினைவு இழக்கும்வரை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில முறைப்பாடு கிடைத்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் ஹங்வெல்ல துன்னான பிரதேசத்தில் இரும்பு துண்டுகள் உள்ளிட்டவற்றை  சேகரிக்கும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.