அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு!

251 0

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கமுடியாதென சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் உருவாக்கப்படும்போது அதற்காக அகழப்பட்ட மண், கற்களைக் கடலில் கொட்டி ஒரு செயற்கைத் துறைமுகம் உருவாக்கப்பட்டது.

45 ஹெக்ரெயர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைத் தீவை சுற்றுலா மையமாக்கப் போவதாக சிறீலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன அரசாங்கத்திற்கு குத்தகைக்கு வழங்க சிறீலங்கா அரசாங்கம் இணங்கியிருந்தது.

இருப்பினும், துறைமுகத்துக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவினை சிறீலங்கா அரசாங்கம் தனது பிடியில் வைத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வாங்கவுள்ள சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன், இது தொடர்பாக கடந்தவாரம், சிறீலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளது.

அத்துடன், இந்தச் செயற்கைத் தீவானது சீன அரசாங்கத்தின் கடன் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படவில்லையெனவும், எனவே இதனை தனியார் மயப்படுத்தத் தேவையில்லையெனவும் துறைமுக அமைச்சர் அர்ஜூன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.