தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானியாவில் வாழும் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு நிகழ்வு.

336 0

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு.

வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தென்மேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை மாவீரர் கதிரவன் மற்றும் மாவீரர் ஜெயந்தி அவர்களின் தாயார் திருமதி கந்தசாமி கமலாவதி அவர்கள் ஏற்றி வைத்தார்தார்கள்.
தமிழீழ தேசியக்கொடியினை வடமேற்குப் பிராந்தியத்தில் லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரரும் வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளருமான திரு கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

வடமேற்குப் பிராந்தியத்தில் ஈகை சுடரினை லெப் கேணல் அவர்களின் சகோதரர் ராஜலிங்கம் மற்றும் வீரவேங்கை தொழில் நாயகனின் சகோதரர் மோகனதாஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.வடமேற்குப் பிராந்தியத்தில் மாவீரர் மரியதாஷின் தங்கை வியஜலட்ஷ்மி சதீஷ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்மாலையினை மேயர் பாப்பா லெப் நாமகள் அவர்களின் சகோதரன் தங்கேஷ்வரன் மற்றும் கப்டன் நகுபனின் சகோதரன் தயானந்தன்
அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து மாவீரர் குடும்பங்களுக்கான கௌரவிப்பினை முன்னெடுத்திருந்தார்கள்.