யாழ். கல்வியங்காடு ஜி.பி.எஸ் ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் நேற்று (15.11.2022) பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர்.
இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பான சி.சி.டி.வி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

