யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது இளைஞரொருவர் 15 வயது சிறுமியை அழைத்து வந்து, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் சிறுமியை மீட்டு, அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் பொலிஸார் அனுமதித்துள்ளதாக தெரியவருகிறது.

