பெண்ணை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படுபவர் கைது!

198 0

பெண் ஒருவரை அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.

வதுரம்ப பகுதியை சேர்ந்த 35 வயதான  ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். வதுரம்ப பிரதேசத்தில் வசித்து வந்த 41 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் தனது சகோதரியைக் காணவில்லை என செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது  கடந்த 13 ஆம் திகதி அவரை தாக்கியதாகவும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.