உணவு பாதுகாப்பு ஆலோசகராக சரத் வீரசேகர நியமனம்!

240 0

உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் அமைச்சரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தே சரத் வீரசேகர பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்படவுள்ளது.