நாளை பிற்பகல் கூடுகின்றது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு !

252 0

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை பிற்பகல் தமது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர், ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.