வரி அதிகரிப்பை பிரதான திட்டமாக வரவு – செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக வாக்களிப்போம்

240 0

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும்.

வரி அதிகரிப்பை மாத்திரம் பிரதான திட்டமாக வரவு செலவு திட்டம் கொண்டிருந்தால் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திங்கட்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அரசாங்கம் மனசாட்சி இல்லாத வகையில் வரிகளை அதிகரித்துள்ளது.

வரி அதிகரிப்பால் நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் காணப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அரச செலவினம் 7,885 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வரி அதிகரிப்பின் ஊடாக அரச வருமானத்தை அதிகரித்து கொள்வதை அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும்.

வரி  அதிகரிப்பு மாத்திரம் வரவு செலவுத் திட்டத்தின் கொள்கையாக காணப்பட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளது. நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.