புதுக்குடியிருப்பில் தீ! இரண்டு வர்த்தக நிலையங்கள் நாசம்(படங்கள்)

103 0

சனிக்கிழமை  இரவு பன்னிரெண்டு மணியளவில்  ஏற்பட்ட தீ விபத்தில் புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பனஎரிந்து நாசமடைந்துள்ளன,

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது. எனினும், உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம்  தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .